நடத்தையில் சந்தேகப்பட்டு கிராம நிர்வாக அதிகாரியான தனது மனைவியை கத்தியால் கணவன் குத்திக் கொன்றார்.
சென்னை, கீழ்கட்டளையை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா (34). இவர் செங்கல்பட்டில் உள்ள எம்.குப்பம் கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் மஞ்சுளாவுக்கு இன்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இந்த அழைப்பு எங்கிருந்து வந்தது? யாருடன் பேசினாய் என்று பிரகாஷ் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பிரகாஷ், கத்தியால் மஞ்சுளாவை சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் மஞ்சுளா இறந்து போனார்.
இதைத் தொடர்ந்து பிரகாஷ், கத்தியுடன் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.