பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவியை ஈவ்-டீசிங் செய்த பொறியியல் மாணவர் உள்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தனது குடும்பத்தினருடன் கோயிலுக்கு சென்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவி உஷா நந்தினியை (18), பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவன் கார்த்திக், அவரது நண்பர்கள் மாணிக்கம் (22), ராஜா (20) ஆகியோர் கேலி கிண்டல் செய்துள்ளனர்.
இது குறித்து மாணவி உஷா, காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், மாணவியை ஈவ்- டீசிங் செய்த மூன்று பேரையும் கைது செய்தனர்.