தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உட்புறப் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஆங்காங்கே பரவலாக மழை பெய்துள்ளது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, வால்பாறையில் அதிகபட்சமாக 8 செ.மீ மழை பெய்துள்ளது.
அடுத்ததாக நடுவட்டத்தில் 6 செ.மீ மழை பெய்துள்ளது. செங்கோட்டை, கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, கூடலூர் பஜார் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மயிலாடி, தோவாலை, பொள்ளாச்சி, குந்தாபாலம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழை பெய்துள்ளது.