''தமிழகத்தில் தி.மு.க.வுடன் உறவு தொடரும்'' என்று மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் வரதராஜன் கூறினார்.
டெல்லி சென்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டயில், ''தமிழகத்தைப் பொருத்தவரை தி.மு.க கூட்டணியில் எங்கள் கட்சி அங்கம் வகிக்கிறது. முதல்வர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கிறது என்றார் வரதராஜன்.
ஆனாலும் ஆகஸ்ட் 6, 7ஆம் தேதி நடைபெறும் கட்சியின் மாநிலக் கவுன்சில் கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்று வரதராஜன் தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தி.மு.க. அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்களை ஆதரித்து வருகிறோம் என்று கூறிய வரதராஜன், ஆனால் மக்கள் விரோத திட்டங்களை கடுமையாக எதிர்த்து வருகிறாம் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றார் வரதராஜன்.