Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அகமதாபா‌த் கு‌ண்டு வெடி‌ப்பு : ஜெயல‌லிதா க‌ண்டன‌ம்!

அகமதாபா‌த் கு‌ண்டு வெடி‌ப்பு : ஜெயல‌லிதா க‌ண்டன‌ம்!
, ஞாயிறு, 27 ஜூலை 2008 (13:34 IST)
குஜரா‌த் மா‌நில‌ம் அகமதாபா‌த்‌‌தி‌ல் நே‌ற்று நட‌ந்த தொட‌ர் கு‌ண்டு வெடி‌ப்புகளு‌க்கு க‌ண்ட‌ன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள அ.இ.அ.‌ி.ு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா, ‌நா‌ட்டி‌ன் பாதுகா‌ப்பை உறு‌தி செ‌ய்ய பொடா போ‌ன்ற கடுமையான ச‌ட்ட‌ங்களை ‌மீ‌ண்டு‌ம் கொ‌ண்டுவர வே‌ண்டு‌ம் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்!

இதுகு‌றி‌த்து ஜெயல‌லிதா வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல்,

பெங்களூ‌ரி‌ல் குண்டு வெடிப்பு நடந்த மறுநாளே குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் குண்டுகள் வெடித்து 40-க்கும் மேற்பட்டவர்கள் பலியானது குறித்தும் 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தது குறித்தும் நான் ஆழ்ந்த வேதனை அடைந்தேன்.

இந்தியாவின் மத நல்லிணக்கத்தையும் அமைதியையும் குலைக்கும் நோக்கத்துடன் அரங்கேற்றியிருக்கும் கோழைத்தனமான செயல் இது. இத்தகைய செயல்களை கடுமையாக எதிர்க்க வேண்டும். குற்றவாளிகளை பிடிக்க மத்திய அரசும் மாநில அரசும் முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.

நாட்டின் ஒற்றுமையையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய `பொடா' போன்ற கடுமையான சட்டங்களை மீண்டும் கொண்டு வர வேண்டும். தீவிரவாதிகளை ஒடுக்க கடும் நடவடிக்கைகள் தேவை. குண்டு வெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்துக்கு என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

எ‌ன்று ஜெயலலிதா தனது அ‌றி‌க்கை‌யி‌ல் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil