தூத்துக்குடி நகராட்சிக்கு உட்பட்ட மரவன்மடம் கிராம் அருகே உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் பொது மக்களுக்கு வினியோகிக்க வைத்திருந்த 240 இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் நேற்று நள்ளிரவு தீயில் கருகியது.
பொது வினியோக அட்டை வைத்திருப்பவர்களுக்கு, இலவசமாக வழங்க பஞ்சாயத்து அலுவலகத்தில் 240 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. மர்ம மனிதர்கள் வைத்ததாக சந்தேகிக்கப்படும் தீ விபத்தில் அவை அனைத்தும் கருகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு காவல் துறை உயர் அதிகாரிகள் விரைந்து வந்து தீ விபத்து ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தி.மு.க. அரசு தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின் படி, தமிழகத்தில் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை இலவசமாக வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.