ஆணுறை, பத்திரிகை தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களில் ஆபாசமான காட்சிகள் இருக்க கூடாது என்று விளம்பர நிறுவனங்களுக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில், ஆணுறை அடைத்து வைத்திக்கும் அட்டையில் ஆபாச விளம்பரம் செய்யக்கூடாது என்று கூறியுள்ள அவர், ஆணுறை என்பது செக்ஸூக்காக மட்டும் அல்லாமல் மருத்துவ ரீதியாகவும் பயன்படுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி ஜோதிமணி, இந்திய விளம்பர தர நிர்ணயக் குழு அனுமதியுடன் விளம்பரம் வெளியிடப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.