பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற 9 ஆவின் ஊழியர்களின் குழந்தைகளுக்கும், 17 பால் உற்பத்தியாளர்களின் குழந்தைகளுக்கும் மடிக்கணினியை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பால்வளத்துறை சார்பில் தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சிறப்பாக தேர்ச்சி பெற்ற 9 ஆவின் ஊழியர்களின் குழந்தைகளுக்கும், 17 பால் உற்பத்தியாளர்களின் குழந்தைகளுக்கும் மடிக்கணினி வழங்கி, ஆவின் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான புரோபயோடிக் தயிரை அறிமுகப்படுத்தினார்.
ஆவின் ஊழியர்களின் 5 பெண் குழந்தைகள், 4 ஆண்குழந்தைகள், 17 மாவட்ட பால் உற்பத்தியாளர்களின் குழந்தைகள் உள்பட மொத்தம் 26 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கினார் என்று தெரிவித்துள்ளது.