சென்னையில் இன்று காலை ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
சென்னை கோயம்பேடு அடுத்த அய்யப்பா நகரில் வாலிபர் ஒருவரின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.
ஆனால் காவல்துறை தரப்பில், இறந்தவர் சாலையை கடக்கும் போது வேகமாக வந்த வாகனம் மோதி இறந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரை மர்ம மனிதர் கொல்லவில்லை என்று காவல்துறை மறுத்துள்ளது.
இதற்கிடையே சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சேகர், மர்ம கொலையாளி விரைவில் பிடிபடுவான் என்றும், மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதே நேரத்தில் சட்டத்தை மக்கள் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், இரவில் கம்புகளுடன் பொதுமக்கள் ரோந்து செல்ல வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.