''இன்றைய ஆட்சியாளர்களால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இல்லை'' என்று மாநில பா.ஜ.க தலைவர் இல.கணேசன் குற்றம்சாற்றியுள்ளார்.
மேட்டுப்பாளையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் எப்படியோ தப்பி பிழைத்து விட்டது. இது தார்மீக வெற்றி என்று கருதிவிட முடியாது. நம்பிக்கை வாக்கெடுப்பில் எண்ணிக்கையில் தான் வெற்றி பெற்று உள்ளார்களே தவிர மக்கள் எண்ணத்தில் வெற்றி பெறவில்லை.
இன்றைய ஆட்சியாளர்களால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இல்லை. கச்சத் தீவை தானமாக கொடுத்தபோது நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவையிலும் தீர்மானம் வைத்து ஒப்புதல் பெறவில்லை. எனவே கச்சத் தீவை திரும்ப பெற வேண்டும்.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தமிழ்நாடு எல்லைக்குள் உள்பட்டது. இந்த திட்டத்துக்கு எங்கள் ஆதரவு உண்டு. மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் இந்த குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவது தமிழக அரசின் கடமை ஆகும்'' என்று இல.கணேசன் கூறினார்.