சென்னை புறநகர் புதிய காவல்துறை ஆணையராக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட ஜாங்கிட், இனி பொதுமக்கள் குறைகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படும் என்றார்.
சென்னையை போலவே புறநகர் பகுதிகளுக்கு புதிய காவல்துறை ஆணையர் அலுவலகம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதையடுத்து பரங்கிமலையில் சென்னை புறநகர் காவல்துறை ஆணையர் அலுவலகத்தை காவல்துறை தலைமை இயக்குனர் கே.பி.ஜெயின் இன்று திறந்து வைத்தார். புதிய ஆணையராக எஸ்.ஆர்.ஜாங்கிட் பொறுப்பேற்று கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜாங்கிட், அம்பத்தூர், மாதவரம், பரங்கிமலை ஆகிய 3 காவல் மாவட்டங்களை உள்ளடக்கிய இதில் 39 காவல் நிலையங்கள் மற்றும் 8 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்படும்.
3 காவல்துறை துணை ஆணையர்கள், 13 உதவி ஆணையர்கள் தற்போது உள்ளனர். விரைவில் மேலும் 2 துணைக் ஆணையர்களும், 14 உதவி ஆணையர்களும், 36 ஆய்வாளர்களும் நியமிக்கப்பட இருக்கின்றனர்.
இந்த காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு உட்பட்டு 50 லட்சம் மக்கள் வருகின்றனர். இனி பொதுமக்களின் குறைகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படும்'' என்று ஜாங்கிட் கூறினார்.