தொழிற்நுட்ப கோளாறு காரணமாக சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் சேவையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பாதிப்பு ஏற்பட்டது.
சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்ட ரயில், கலங்கரை விளக்கம், திருமயிலை ரயில் நிலையம் இடையே வந்த போது தொழிற்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் பெரிதும் அவதியுற்றனர்.
இதையடுத்து தகவலறிந்த, தென்னக ரயில்வே அதிகாரிகள், பொறியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தொழிற்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
கோளாறை சரி செய்ய வெகுநேரம் ஆனதால், பெரும்பாலான பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி ரயில்வே பாதை வழியாக நடந்தே சென்றனர்.
இது போன்ற தொழிற்நுட்ப கோளாறு முதன்முறையாக பறக்கும் ரயில் சேவைப் பிரிவில் ஏற்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.