தமிழகத்தில் நேற்று ஆங்காங்கே பல இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது.
இன்று காலை 8.30 மணி வரை பெய்த மழை அளவு:
அதிகபட்சமாக திருத்தணி, உதகமண்டலம், திருத்துறைபூண்டி, கொடைக்கானல் ஆகிய இடங்களில் 4 செ.மீ மழை பெய்துள்ளது.
முத்துப்பேட்டை, மருங்காபுரி தலா 3 செ.மீட்டரும், திருவாடனை, தொண்டி, ஓசூர், குன்னூர், கரூர், பொரையூர் தலா 2 செ.மீ மழையும் பெய்துள்ளது.
அடுத்த இரண்டு நாட்களில் தமிழகத்தின் உட்புறப் பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோரப் பகுதிகளில் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.