தமிழக மீனவர்களுக்கான கடந்த 19ஆம் தேதி உண்ணாவிரதம் இருந்ததை கண்துடைப்பு நாடகம் என்பதா? என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு முதல்வரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு பற்றி கருணாநிதி கண் துடைப்பு நாடகம் ஆடுவதாக ஜெயா கூறுகிறாரே? என்று கேள்வி எழுப்பியுள்ள கருணாநிதி, 1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் நின்று "கச்சத் தீவை மீட்டே தீருவேன்'' என்று முழங்கிய ஜெயலலிதா, அதற்குப் பிறகு ஐந்தாண்டு காலமும், அதற்குப் பிறகும் 2001 முதல் 2006 வரை ஐந்தாண்டு காலமும் ஆட்சியிலே இருந்தாரே அப்போது கச்சத் தீவை மீட்டு விட்டாராப அல்லது எதையாவது மீட்டிக் கொண்டிருந்தாரா? என்று கருணாநிதி பதில் அளித்துள்ளார்.
பிரதமர் பதவிக்கு மாயாவதியை முன்னிலைப்படுத்தியதால் பா.ஜனதா கூட்டணி அதிருப்தி அடைந்துள்ளதாக செய்தி வந்துள்ளதே? என்று கேள்வி கேட்டுள்ள கருணாநிதி, ''எதிரிக்கு எதிரி நண்பன்'' என்ற முறையில் உணர்ச்சி வேகத்திற்கு அடிமையாகிறவர்கள் அறவழியில் வெற்றியினை அடைய முடியாது.
அணுசக்தி ஒப்பந்தம் உள்பட ஒவ்வொரு நடவடிக்கையையும் நாட்டு நலனுக்காகவே எடுத்து வருவதாக நேற்றையதினம் பிரதமர் மன்மோகன்சிங் கூறிய வார்த்தை வெற்றி பெறும் என்றே நம்புகிறேன் என்று கருணாநிதி பதில் அளித்துள்ளார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளியைப் போல மத்திய அரசு காட்சி அளிக்கிறது என்ற அத்வானியின் பாராளுமன்றத்தில் பேசி இருக்கிறே என்று கேள்வி எழுப்பியுள்ள கருணாநிதி, அவருடைய தகுதிக்கு அந்தப்பேச்சு சரியல்ல என்று பதில் அளித்துள்ளார்.