செங்கல்பட்டு பகுதியில் திங்கட்கிழமை முதல் மின்சாரம் தடை செய்யப்படும் நேரம் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து செங்கல்பட்டு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விவசாயத்துக்கு
செங்கல்பட்டு மின் பகிர்மான வட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு திங்கட்கிழமை காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையில் 24 மணி நேரம் மின்சார விடுமுறை விடப்படும்.
விவசாயத்திற்கு ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் பகலில் 4 மணி நேரம் சுழற்சி அடிப்படையில் மின்சாரம் வழங்கப்படும். மற்ற நாட்களில் பகலில் 6 மணி நேரம் வழக்கம் போல் வழங்கப்படும். இரவு நேரங்களில் வழக்கம் போல் அனைத்து நாட்களிலும் 8 மணி நேரம் மின் வினியோகம் இருக்கும்.
நகர்-கிராமங்களில்
கிராமங்களில் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் பகல் நேரத்தில் காலையில் 2 மணி நேரமும், மாலையில் 2 மணி நேரமும் மொத்தமாக 4 மணி நேரம் மின் வினியோகம் இருக்காது.
செங்கல்பட்டு நகராட்சி பகுதியில் தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் மின் வினியோகம் இருக்காது. மதுராந்தகம் நகராட்சி பகுதியில் தினமும் காலை 10 மணி முதல் 12 மணி வரை 2 மணி நேரம் மின்சாரம் வினியோகம் இருக்காது.
மற்ற பேரூராட்சிகளில் சுழற்சி முறையில் தினமும் 2 மணி நேரம் மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று