தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சிறிலங்க கடற்படையை கண்டித்து தி.மு.க. சார்பில் இன்று நடைபெற்ற உண்ணாவிரதத்தில் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
தமிழக மீனவர்கள் சிறிங்க கடற்படையினரால் தொடர்ந்து சுட்டுக்கொல்லப்படுவதை கண்டித்தும், இப்பிரச்சனைக்கு மத்திய அரசு தலையிட்டு உடனடி நடவ டிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்தியும் தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
சென்னையில் சேப்பாக்கத்தில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரத்தை முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
இந்த உண்ணாவிரத்தில் அமைச்சர் பரிதி இளம் வழுதி, நாடாளுமன்ற உறுப்பினர் செ.குப்புசாமி, மேயர் மா.சுப்பிரமணியன் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் பொருளாளர் டி.சுதர்சனம் நேரில் வந்து வாழ்த்தினார். அவருடன் யசோதா எம்.எல்.ஏ., சைதைரவி, எம். கோவிந்தசாமி, ஜெய கலாபிரபாகர் ஆகியோரும் வந்திருந்து வாழ்த்தினர்.
இதே போல் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு சார்பில் கராத்தே தியாகராஜன் ஆகியோர் வாழ்த்தினர். விடுதலை சிறுத்தை கட்சியில் தலைவர் திருமாவளவனுடன் பாவரசு, வன்னியரசு வந்திருந்து வாழ்த்தினர். ஜனநாயக முன்னேற்ற கழக தலைவர் ஜெகத்ரட்சகன் வாழ்த்தி பேசினார்.
மாலை 5 மணிக்கு அமைச்சர் அன்பழகன், அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு ஜூஸ் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
இதே போல் தமிழகம் முழுவதும் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.