பா.ம.க தலைவர் கோ.க.மணி இன்று தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் கே.பி. ஜெயினை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.
பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, சட்டமன்ற உறுப்பினர் திருக்கச்சூர் ஆறுமுகம், பா.ம.க வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பாலு உள்ளிட்டோர் இன்று தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் கே.பி.ஜெயினை அவரது அலுலகத்தில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், ''அரியலூர், பெரம்பலூர் பகுதியில் எந்தவிதமான வன்முறை சம்பவங்களோ, அசம்பாவிதங்களோ நடக்காத போது பா.ம.க.வினர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அதற்கு போதிய காரணமும் காவல்துறை தரப்பில்சொல்லப்படவில்லை.
காடுவெட்டி குரு கைதுக்கான காரணம் கூட சரிவர விளக்கப்படவில்லை. பா.ம.க.வினர் வாழ முடியாத சூழ்நிலையை அங்கு ஏற்படுத்த முயற்சிகள் நடக்கிறது. நள்ளிரவுக் கைதுப்படலம் இருக்காது என்று கூறிய இந்த அரசு, தற்போது பா.ம.க.வினரை நள்ளிரவில் கைது செய்து வருவது ஏன்?
பா.ம.க.வினர் மீது ஆளும் தி.மு.க அரசு வன்முறையை, அடக்குமுறையை நடத்த திட்டமிட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும்'' என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.