தமிழக மீனவர்களை பாதுகாக்கவும் கச்சதீவை மீட்கவும் வலியுறுத்தி வரும் 21ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் சார்பில் நாகப்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என்று அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கச்சதீவை மீட்கும் காலம் நெருங்கி விட்டது என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை அன்று கூடிய தி.மு.க.வின் உயர் மட்ட செயல் திட்டகுழு நிறைவேற்றி இருப்பது போற்றுதலுக்குரியதாகும்.
அந்த வகையில் தி.மு.க.வின் அறப் போராட்டத்தை விடுதலை சிறுத்தைகள் மனமுவந்து வரவேற்கிறது. கச்சத்தீவை மீட்க வேண்டும் என்கிற ஒற்றை கோரிக்கையை முன்னிறுத்தி தமிழகத்தின் அனைத்து கட்சியினரும் ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் ஒன்று பட்டு குரல் எழுப்ப வேண்டியதும் போராட வேண்டியதும் மிக இன்றியமையாதத் தேவையாகும்.
இந்த புரிதலின் அடிப்படையில் தமிழக மீனவர்களை பாதுகாக்கவும் கச்சதீவை மீட்கவும் வலியுறுத்தி நாளை தி.மு.க. நடத்தவுள்ள பட்டினிப் போராட்டத்தை விடுதலை சிறுத்தைகள் தோழமை உணர்வுவோடு வரவேற்று ஆதரிக்கிறது. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 21ஆம் தேதி விடுதலைசிறுத்தைகளின் ஆர்ப்பாட்டம் நாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது'' என்று திருமாவளவன் கூறியுள்ளார்.