சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.5 கோடி மதிப்புள்ள போதை பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் இன்று சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர். இதற்கு காரணமான இரண்டு பேரை கைது செய்தனர்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஹமீத்கனி (37),பெரம்பலூரை சேர்ந்த ஹூசைன் அப்துல்லா (35) ஆகியோர் சிங்கப்பூர் செல்வதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்துக்கு வந்தனர்.
அப்போது அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் கேட்டமைன் என்ற போதை பொருள் இருப்பதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
49 கிலோ கொண்ட இந்த போதை பொருள், சர்வதேச மதிப்பில் இது 5 கோடியாகும் என்று சங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்த சுங்கத்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.