தமிழக மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினரால் தாக்கப்படுவதை கண்டித்து நாளை ராமேஸ்வரத்தில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்கு அமைச்சர் மு.க.ஸ்டாலினும், நாகையில் நடைபெறும் உண்ணாவிரதத்திற்கு கனிமொழியும் தலைமை தாங்குகின்றனர்.
இது தொடர்பாக தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''தமிழக கடற்கரையோர பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும் போது, சிங்கள ராணுவ வீரர்களால் காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும் மற்றும் இப்பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் தி.மு.க.சார்பில் தமிழகம் எங்கும் உண்ணாவிரத அறப்போராட்டம் நாளை (19ஆம் தேதி) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
இந்த போராட்டத்துக்கு தலைமை தாங்குபவர்களின் விவரம் :
சென்னை- பொருளாளர் அமைச்சர் ஆற்காடு வீராசாமி. ராமேஸ்வரம் (ராமநாதபுரம்) - துணை பொதுசெயலாளர் அமைச்சர் மு.க.ஸ்டாலின், கன்னியாகுமரி- துணை பொதுச்செயலாளர் சற்குணபாண்டியன்,
மாமல்லபுரம் (காஞ்சிபுரம்)- முதன்மை செயலாளர் அமைச்சர் துரைமுருகன், மாநிலங்களவை உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி, திருவொற்றியூர்- உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, அமைச்சர் கே.பி.பி.சாமி.
கடலூர்- பெரம்பலூர் மாவட்ட செயலாளர் மத்திய அமைச்சர் ஆ.ராசா, வேங்கடபதி, முத்துப்பேட்டை (திருவாரூர்)- சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், மீமிசல் (புதுக்கோட்டை)- தேர்தல் பணிக்குழு செயலாளர் எஸ்.ரகுபதி, மாநிலங்களவை உறுப்பினர் அ.அ.ஜின்னா.
தரங்கம்பாடி (நாகை)- உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் சுப்புலட்சுமி ஜெகதீசன், மரக்காணம் (விழுப்புரம்) - விழுப்புரம் மாவட்ட செயலாளர் க.பொன்முடி., வேதாரண்யம் (நாகை) - திருச்சி மாவட்ட செயலாளர் கே.என்.நேரு, நாகப்பட்டினம் - மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, உவரி (நெல்லை)- உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் ரகுமான்கான், பூம்புகார் (நாகை)- திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் எ.வ.வேலு.
தூத்துக்குடி- மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என்.சிவா, கோட்டைப்பட்டினம் (புதுக்கோட்டை) - புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பெரியண்ணன். அரசு. புதுவை- புதுவை மாநில அமைப்பாளர் ஆர்.வி.ஜானகிராமன், காரைக்கால்- புதுவை-காரைக்கால் மாநில அமைப்பாளர் ஏ.எம்.எச்.நாஜீம்.
மேற்குறிப்பிட்ட இடங்களை தவிர மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் உண்ணாவிரத அறப்போராட்டம் அதே நாளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.