சென்னையில் பல இடங்களில் தொடர்ந்து நடந்து வரும் மர்ம கொலைகள் சம்பந்தமாக முக்கிய தடயம் சிக்கி உள்ளதாகவும், கொலையாளிகளை விரைவில் பிடிப்போம் என்றும் காவல் துறை தலைமை இயக்குனர் கே.பி. ஜெயின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தொடர் கொலைகளுக்கு காரணமான குற்றவாளிகள் குறித்து முக்கிய தடயம் கிடைத்துள்ளது. விரைவில் குற்றவாளிகளைப் பிடிப்போம் என்றார்.
"எதற்காக இந்த தொடர் கொலைகள் நடைபெறுகிறது. குற்றவாளி யார் போன்ற விவரங்கள் விசாரணையின் முடிவில்தான் தெரிய வரும் ஒரு சில வழக்குகளில் குற்றவாளிகளை கண்டு பிடிப்பதில் தாமதம் ஏற்படலாம். ஆனால் பல வழக்குகளில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்துள்ளோம்" என்றும் அவர் கூறினார்.
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் நேற்று ஒரு கடையின் முன்பு ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் சென்னை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.