காமராஜரின் 106வது பிறந்த நாளையொட்டி முன்னிட்டு அவரது படத்துக்கு அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை அரசு போக்குவரத்து கழக அலுவலகம் எதிரில் அமைந்துள்ள காமராஜர் திருவுருவச் சிலை அருகே வைக்கப்பட்டுள்ள அவரது படத்துக்கு அமைச்சர்கள் மு.க. ஸ்டாலின், பரிதி இளம்வழுதி, மேயர் மா. சுப்பிரமணியம், முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியன், சென்னை மாநகராட்சி மண்டல தலைவர் சேப்பாக்கம் சுரேஷ்குமார் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சத்தியமூர்த்தி பவனில் இன்று காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு கலந்து கொண்டு காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் சுதர்சனம், யசோதா, அருள் அன்பரசு, போளூர் வரதன், மாவட்ட தலைவர்கள் கோவிந்தசாமி, ராயபுரம் மனோ, மங்கள்ராஜ், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் டாக்டர் செல்லக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஜி.வினாயகமூர்த்தி, முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சிரஞ்சீவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.