சிறிலங்கக் கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வேதாரண்யத்தைச் சேர்ந்த நாராயணன், வாசகன் ஆகிய இருவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக மத்திய அரசிற்கு ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"சிறிலங்கக் கடற்படையின் தாக்குதலைத் தடுத்து நிறுத்தக் கோரி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை பலமுறை நேரிலும், கடிதங்கள் மூலமும் வலியுறுத்தியும் தமிழக மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல் சிறிதளவும் குறையவில்லை. தமிழக மீனவர்களுக்கு எதிராக சிங்கள அரசு நடத்தும் கொலை வெறித்தாக்குதலை ஊக்குவிக்கும் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கிறேன்" என்று ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
முன்னதாக சிறிலங்கக் கடற்படைத் தாக்குதலில் படுகாயமடைந்த முரளி என்கிற மீனவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.