அரசு கேபிள் டி.வி. இணைப்புக் கட்டணமாக வீடு ஒன்றுக்கு மாதந்தோறும் 100 ரூபாய்க்கு மிகாமல் வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''அரசு கேபிள் டி.வி. தொடங்குவது என்பது, அதன் மூலம் அரசின் வருமானத்தை பெருக்கிடும் நோக்கத்தினால் அல்ல.
உண்மையில் கேபிள் டி.வி. நடத்துகிறவர்கள் பயனாளிகளான பொது மக்களுக்கு நியாயமான கட்டணத்தில் தரமான சேவையினை வழங்கிடும் நோக்கத்தோடு கேபிள் இணைப்புக் கட்டணத்தை ஒரு வரம்புக்குள் கட்டுப்படுத்திட வேண்டும் என்பதற்காகத்தான்.
இந்த நல்ல நோக்கத்துடன் அரசு கேபிள் டி.வி. இணைப்புக் கட்டணமாக வீடு ஒன்றுக்கு மாதந்தோறும் 100 ரூபாய்க்கு மிகாமல் வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.