''தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூடக் கோரி நாளை போராட்டம் நடத்தப்படும்'' என்று பா.ம.க அறிவித்துள்ளது.
இதுகுறித்து, பாமக தலைவர் கோ.க.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில். ''மது குடிப்பவர்களின் பட்டியலில் இந்திய அளவில் 3ம் இடத்தில் இருந்த தமிழகம், விரைவில் முதல் இடத்தை பிடிக்க உள்ளது’ என்று ஆய்வு தகவல்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை ஒரே நேரத்தில் மூடவில்லை என்றாலும், பாதியாக குறைத்து மீதியை படிப்படியாக மூடலாம்.
விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும்.
இதேபோல் கல்வி நிறுவனங்கள், கோயில், தேவாலயங்கள், மசூதி ஆகியவை அருகிலும், பொதுமக்கள் கூடும் இடங்களில் உள்ள மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பா.ம.க மகளிர் அணி சார்பில் வரும் நாளை (12ஆம் தேதி) தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இந்த ஆர்ப்பாட்டத்தை பெண்களே முன்னின்று நடத்துகின்றனர் என்று கோ.க.மணி கூறியுள்ளார்.