சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக உலக வங்கி உதவியுடன் தமிழக அரசு 6,500 வீட்டுகளை கட்டி கொடுக்க உள்ளது.
இதற்கான மாதிரி கட்டட வரைப்படத்தை முதலமைச்சர் கருணாநிதி தலைமைச் செயலகத்தில் இன்று பார்வையிட்டார்.
ரூ.293 கோடியில் சென்னை கடற்கரை பகுதியான நொச்சிக்குப்பத்தில் இருந்து சீனிவாசபுரம் வரை குடிசை பகுதிகளை அகற்றிவிட்டு உலக வங்கி உதவியுடன் குடியிருப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது.
இந்த நிகழ்வின் போது குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் சுப.தங்கவேலன், வீட்டு வசதித்துறை செயலர் ஆர்.செல்லமுத்து உடன் இருந்தனர்.