மீனவர் பிரச்னை தொடர்பாக மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் ஜூலை 13ஆம் தேதி தனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக மீனவர்களை சிறிலங்கா கடற்படையினர் தாக்குவதைக் கண்டித்து மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
மீனவர் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன. இதைக் கண்டிக்கும் வகையில் தே.மு.தி.க சார்பில் எனது தலைமையில் ஜூலை 13ஆம் தேதி ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டமும், பேரணியும் நடைபெறும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.