முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் விடுதலை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதற்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு தாக்கீது அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ''ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நாங்கள் இருவரும் வேலூர் மத்திய சிறைச்சாலையில் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வருகிறோம்.
எங்களை விடுதலை செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில்கூறியுள்ளனர்.
இந்த மனு நீதிபதி ஏ. குலசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு 2 வார காலத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி மத்திய, மாநில அரசுக்கும், மத்திய புலனாய்வு கழகத்துக்கும் தாக்கீடு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.