தமிழகத்தில் நேற்று ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழை பெய்தது.
தொழுதூரில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது. திருமங்களம், சிவகங்கையில் தலா 3 செ.மீ மழையும், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திருக்கோயிலூர், அரக்கோணம், பெரியநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
அடுத்த 2 நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.