பொள்ளாச்சி அருகே மின்சாரம் பாய்ந்து மூன்று தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே பலியானார்கள்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கீழகரம்பட்டியில் நார் தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் இன்று வேலை செய்து கொண்டிருந்த வீரமணி (32) என்பவர் அருகில் கிடந்த மின்சார வயரை மிதித்து விட்டார்.
அப்போது அலறி துடித்த அவரை காப்பாற்ற கணவர் மணி (43) முயன்றார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதை பார்த்த முத்து லட்சுமி (35) ஓடி வந்த அவர்களை காப்பாற்ற முயன்றார். அப்போது இவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் மூன்று பேரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மூன்று பேரின் உடல்களும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் தேனி மாவட்டத்தில் உள்ள அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.