சிவில் நீதிபதிகள் தேர்வில் நீதித்துறையில் பணியாற்றும் சட்டப்படிப்பு முடித்தவர்களும் பங்கேற்கலாம் என்ற நீதிபதிகளின் பரிந்துரையை கைவிடக் கோரி தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இன்று பேரணியாக சென்ற வழக்கறிஞர்கள், பின்னர் சங்கத் தலைவர் பால் கனகராஜ் தலைமையில் தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலியை சந்தித்து மனு கொடுத்தனர்.
இந்த நீதிமன்ற புறக்கணிப்பில் பெண்கள் வழக்கறிஞர் சங்கமும், தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கம் கலந்து கொண்டது.