ஈரோடு அருகே நடந்த சாலை விபத்தில் ராணுவ வீரர் மற்றும் பொறியாளர் இருவர் பரிதாபமாக இறந்தார்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள மேல்வாணியை சேர்ந்தவர் நாகராஜன் (28). இவர் தற்போதுதான் பொறியியல் படிப்பை முடித்துள்ளார். இவரது நண்பர் கீழ்வாணியை சேர்ந்த சரவணகுமார் (32). இவர் செகந்திரபாத்தில் ராணுவத்தில் பணியாற்றி வந்தார்.
திருமணத்திற்கு பெண் பார்க்க விடுமுறையில் வந்துள்ளார் சரவணகுமார். சம்பவத்தன்று நண்பர்கள் இரண்டு பேரும் இருசக்கர வாகனத்தில் கோபிசெட்டிபாளையம் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் இருந்த மரத்தில் இருசக்கர வாகனம் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். தலையில் பலத்த காயம் அடைந்த இவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.