பி.எட். சேர்க்கைக்கான விண்ணப்பங்களை சேர்ப்பதற்கான தேதி ஜூலை 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2008-09 ஆம் கல்வியாண்டில் சென்னை, கல்லூரிக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், தமிழகத்திலுள்ள கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் சேர்க்கை தொடர்பாக ஒற்றைச் சாளர முறையில் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, விண்ணப்பத்தினை வாங்கிய அதே மையங்களில் நேரிலோ அல்லது அஞ்சல்
மூலமாகவோ சேர்த்திட, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஜூலை 5ஆம் தேதிக்குப் பதிலாக ஜூலை 25ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 25ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள், அந்தந்த மையங்களில் சேரும்படி, கிடைக்கும்படி அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பங்களை கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்புதல் கூடாது. காலதாமதமாகப் பெறப்படும்
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று கூறப்பட்டுள்ளது.