Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌உடன்பாட்டை ரத்து செய்து கச்சத்தீவை மீட்க வேண்டும்: ராமதாஸ்!

‌உடன்பாட்டை ரத்து செய்து கச்சத்தீவை மீட்க வேண்டும்: ராமதாஸ்!
, வெள்ளி, 4 ஜூலை 2008 (16:26 IST)
''கடல் எல்லை தொடர்பாக ‌சி‌றில‌ங்காவுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள உடன்பாட்டை ரத்து செய்து கச்சத்தீவை மீட்க வேண்டும்'' என்று பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதாஸ் வ‌லியு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌‌ளி‌யி‌‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ஒரு நாட்டின் குடிமக்களை ஆயிரக்கணக்கில் இன்னொரு நாட்டின் ஆயுதப் படையினர் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று, சித்திரவதை செய்வது என்பது உலகில் வேறு எங்கும் நடக்காத கொடுமையாகும்.

சி‌றில‌ங்கா கடற்படையினரின் தொடர் அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, நமது மீனவர்களின் உயிருக்கும், உடமைக்கும் நிலையான பாதுகாப்புத் தேடித்தர வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது.

1974ஆம் ஆண்டும், பின்னர் 1976ஆம் ஆண்டும் கச்சத்தீவு தொடர்பாகவும், கடல் எல்லைத் தொடர்பாகவும் ‌சி‌றில‌ங்காவுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள உடன்பாடுகள் மறுஆய்வு செய்யப்பட வேண்டும். அந்த உடன்பாடுகளை ரத்து செய்து கச்சத்தீவை மீண்டும் நம்வசம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் தமிழக அரசு, மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.

வழக்கம்போல இந்த முறையும் முதலமைச்சரோ, தலைமைச் செயலாளரோ, மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வலியுறுத்திக் கொண்டிருக்காமல், முதலமைச்சர் கருணாநிதி நேரடியாக டெல்லிக்கு செல்ல வேண்டும். பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாகாந்தி ஆகியோரை சந்தித்து நம் மீனவர்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் தொடர்ந்து ஏற்பட்டு வரும் அச்சுறுத்தல் மற்றும் ஆபத்து பற்றி எடுத்துக்கூறி நிலையான பாதுகாப்பை தேடி தரும் திட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும்.

இனி ஒரு இந்திய மீனவருக்கு ஆபத்து ஏற்பட்டால், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என்று ‌சி‌றில‌‌‌ங்கா அரசை இந்தியா கடுமையாக எச்சரிக்கை செய்ய வேண்டும் என வலியுறுத்த வேண்டும். அத்தகைய எச்சரிக்கை விடுத்ததற்கு பின்னர்தான் சென்னைக்கு திரும்புவேன் என்று மத்திய தலைவர்களிடம் முதலமைச்சர் கருணாநிதி எடுத்துக் கூற வேண்டும். தேவைப்பட்டால், அனைத்து கட்சி தலைவர்களையும் முலமைச்சர் கருணாநிதி இதில் துணைக்கு அழைத்து செல்வதில் தவறில்லை எ‌ன்று ராமதா‌‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil