மாஜிஸ்திரேட் பணி நியமன விதிகளில் மாற்றம் செய்து அறிவித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.
உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் அடங்கிய குழு சமீபத்தில் மாவட்ட முன்சீப் மற்றும் மாஜிஸ்திரேட் பணி நியமன விதிகளில் மாற்றம் செய்து அறிவித்தது. இதற்கு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த விதிமுறையை மாற்றம் செய்திட வலியுறுத்தியும், அதனை மறுபரிசீலனை செய்யக் கோரியும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் பிரபாகரன் கூறுகையில், இந்த விதியை மாற்ற கோரி நாளை ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், நாளை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.