காய்கறி ஏற்றி வந்த மினி வேனின் டயர் வெடித்ததில் வாகனம் கவிழ்ந்து இரண்டு விவசாயிகள் பலியானார்கள். 7 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
வேலூர் மாவட்டம் காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை கோயம்பேட்டிற்கு மினி வேன் ஒன்று காய்கறி ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம், சின்னையன்சத்திரம் அருகே வந்து கொண்டிருந்தபோது வேனின் டியர் வெடித்தது. இதில் வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. வாகனத்தில் இருந்த வாலாஜாபேட்டையை சேர்ந்த காசி (45), வேலு (4) ஆகியோர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள். 7 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
காயம் அடைந்த 7 பேரில் 5 பேர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையிலும், 2 பேர் சென்னை அரசு பொது மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மின் வேன் ஓட்டுனர் வெங்கடேசனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.