Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முல்லைப் பெரியாறு ‌பிர‌ச்சனை: கேரளா அரசு கூறுவதை ஏ‌ற்க முடியாது! துரைமுருகன்

முல்லைப் பெரியாறு ‌பிர‌ச்சனை: கேரளா அரசு கூறுவதை ஏ‌ற்க முடியாது! துரைமுருகன்
, வியாழன், 3 ஜூலை 2008 (12:01 IST)
''டெல்லி ஐ.ஐ.டி. நிபுணர்கள் குழு முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு நடத்தி அணையின் உயரத்தை அதிகரித்தால் ஆபத்து என்று அறிக்கை அளித்துள்ளதாக கேரள அரசு கூறுவதை ஏற்கமுடியாது'' என்று தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூ‌றினா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு ‌அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிக்கும் பிரச்னையில் தமிழக அரசின் கருத்தைக் கேட்க வேண்டியதில்லை என்று கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் கூறியிருப்பதில் எந்தவித நியாயமும் இல்லை.

ெல்லி ஐ.ஐ.டி. நிபுணர்கள் குழு முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு நடத்தி அணையின் உயரத்தை அதிகரித்தால் ஆபத்து என்று அறிக்கை அளித்துள்ளதாக கேரள அரசு கூறுவதை ஏற்கமுடியாது. எனது வழக்கறிஞர் எனக்கு சாதகமாகத்தான் பேசுவார். அதுபோலதான், கேரள அரசு அமைத்த ஐ.ஐ.டி. நிபுணர்கள் குழு கேரளத்துக்கு சாதகமாக அறிக்கை கொடுத்துள்ளது.

மத்திய நீர்வள ஆணையம் முல்லைப் பெரியாறு அணையில் 3 முறை ஆய்வு நடத்தி அணையின் உயரத்தை அதிகரிக்கலாம் என்று அறிக்கை தந்துள்ளது. இந்த ஆய்வறிக்கையை எதிர்த்து கேரள அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது என்று துரைமுருகன் கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil