தமிழகத்தில் 3வது அணி தவிர்க்க முடியாதது என்று நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் கார்த்திக் கூறினார்.
மதுரையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் 3வது அணி தவிர்க்க முடியாதது. நாடாளுமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோருடன் இணைந்து 3வது அமைக்கப்படும்.
இது தொடர்பாக நடிகர்கள் சரத்குமார், விஜயகாந்த்தை விரைவில் சந்தித்து பேசுவேன் என்று நடிகர் கார்த்திக் கூறினார்.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட நடிகர் கார்த்திக், தற்போது புதிய கட்சி ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.