தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நிலநடுக்க அபாயம் இருப்பதாக புவியியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அந்தமான் நிக்கோபரில் நேற்று மாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கத்தை சென்னையில் கோயம்பேடு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உணர முடிந்தது.
இதுவரை நிலநடுக்கம் பாதிக்காத பகுதியாக இருந்து வந்த தமிழகம், தற்போது பூமிக்கு அடியில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் காரணமாக நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாக மாறியுள்ளது என்றும் குறிப்பாக சென்னை, கோவை, வேலூர் மற்றும் குமரி மாவட்டங்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும் ஆய்வில் கண்டறிப்பட்டுள்ளது என புவியியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.