அந்தமானில் இன்று 6.7 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காலை 11.40 மணியளவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏதும் இல்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் உள்ள காவல் அதிகாரி எஸ்.எம்.திவாரி கூறுகையில், நிலநடுக்கத்தினால் பொது மக்கள் பீதியடைந்து சாலைகளுக்கு ஓடி வந்ததாகவும், சேதம் எதுவும் ஏற்பட்டதாகத் தகல் இல்லை என்றும் தெரிவித்தார்.
சென்னையிலும் அதிர்வு!
அந்தமான் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் சென்னையிலும் உணரப்பட்டன.
நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாலை நில அதிர்வு உணரப்பட்டது. உயரமான கட்டடங்களில் வசிப்போர் நில அதிர்வை அதிகளவில் உணர்ந்தனர்.
சில இடங்களில் பொதுமக்கள் பீதியடைந்தனர். மற்றபடி சேதம் எதுவும் இல்லை.
நில அதிர்வு அளவு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.