பொன்னேரியில் அரசு மருத்துவரை வழக்கறிஞர்கள் தாக்கியதை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் இன்று 2 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரியில் பணியில் இருந்த அரசு மருத்துவரை தாக்கிய மூன்று வழக்கறிஞர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும், ஆந்திர மாநிலத்தைப் போன்று மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் வகையில் தமிழக அரசு சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை 7.30 மணியிலிருந்து 9.30 மணி வரை அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர்கள் மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தம் செய்தனர்.
இந்த வேலை நிறுத்தம் சென்னை, திருவள்ளூர், திண்டுக்கல், சேலம், நாகப்பட்டினம் உள்பட மாவட்ட முழுவதும் நடைபெற்றது.
மருத்துவர்களின் வேலை நிறுத்தத்தால் நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று மருத்துவ கல்வி இயக்குனர் மருத்துவர் கலாநிதி கூறினார்.