சென்னை விமான நிலையத்தில் அகமதாபாத்தில் இருந்து நேற்றிரவு சென்னை வந்த ஒரு பயணியிடமிருந்து ரூ.68 லட்சம் மதிப்புள்ள நகைகளை வருமான வரிதுறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அகமதாபாத்தில் இருந்து ராம்தேவ் (53) என்பவர் நேற்றி இரவு விமானம் மூலம் சென்னை வந்தார். சந்தேகத்துக்கிடமான அவரை வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, அவர் வைத்திருந்த பையில் 8 கிலோ தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை வாங்கியதற்கான ரசீதுகள் எதுவும் அவரிடம் இல்லை.
இதனைத் தொடர்ந்து வருமான வரித்துறையினர் நகைகளை பறிமுதல் செய்தனர். இந்த நகையின் மொத்த மதிப்பு ரூ.68 லட்சமாகும். ராம்தேவை கைது செய்த வருமானவரித்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.