வழக்கறிஞர் ஒருவர் தாக்கப்பட்டதற்கு காவல்துறை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மதுரையில் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஒரு வழக்கு சம்பந்தமாக கீரத்துரை காவல் நிலையத்திற்கு சென்று விட்டு திரும்பியபோது சில கும்பல் அவரை தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயம் அடைந்த செல்வம், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே காவல்துறையினர் முறையாக விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை பிடிக்கவில்லை என்று வழக்கறிஞர்கள் சங்கத்தினர் குற்றம்சாற்றினர்.
இந்த நிலையில் காவல்துறையினர் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யக் கோரி இன்று மதுரையில் உள்ள 25 நீதிமன்றத்தில் 2,500 வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்தனர். இதனால் நீதிமன்ற பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.