விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பா.ம.க.வினர் 50 பேர் நேற்று தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான கருணாநிதி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.
விழுப்புரம் மேற்கு மாவட்ட பா.ம.க துணைத் தலைவர் பெரியண்ணன், விழுப்புரம் பஞ்சாயத்து உறுப்பினர் ரகுபதி, கண்டமங்கலம், சின்னசேலம், மயிலம் பஞ்சாயத்துகளை சேர்ந்த பா.ம.க.வினர் 50 பேர் சென்னை கோபாலபுரத்தில் உள்ள முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து அக்கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ம.க. ஜூலை 17ஆம் தேதி வெளியேற்றப்பட்ட பிறகு 2வது முறையாக பா.ம.க.வினர் தி.மு.க.வில் இணைந்துள்ளனர்.
ஏற்கனவே பா.ம.க.வை சேர்ந்த திண்டிவனம் பஞ்சாயத்து தலைவர் தி.மு.க.வில் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.