Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சித்தா, ஓமியோபதி படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்ப‌ம்!

சித்தா, ஓமியோபதி படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்ப‌ம்!
, புதன், 25 ஜூன் 2008 (16:50 IST)
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் இயங்கும் தமிழக அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பிஎச்எம்எஸ் போன்ற பட்டப்படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

தமிழக அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டில் பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பிஎச்எம்எஸ், பியுஎம்எஸ் மற்றும் பிஎன்ஒய்எஸ் பட்டப் படிப்புகளில் சேர பிளஸ் 2 படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப படிவங்கள் நாளை (26ஆம் தேதி) முதல் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி, திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரி, சென்னை அரசு யுனானி மருத்துவக் கல்லூரி, சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் கிடைக்கும். எழுத்து மூலம் நேரிலோ அஞ்சல் வழியாகவோ விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் ரூ.500க் கான தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் எடுக்கப்பட்ட டிடி இணைத்து அனுப்ப வேண்டும். சென்னையில் செல்லத்தக்க வகையில் 'இயக்குனர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி, சென்னை' என்ற பெயரில் டிடி பெறப்பட வேண்டும்.

தபாலில் விண்ணப்பம் பெற விரும்புவோர் ரூ.70 அஞ்சல் தலை ஒட்டப்பட்ட உறையை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் ஜாதிச் சான்று நகலுடன் கேட்பு கடிதம் அளித்து விண்ணப்பத்தை இலவசமாக பெறலாம். சிறப்பு பிரிவுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.100. அனைத்து படிப்புகளுக்கும் ஒரே விண்ணப்ப படிவத்தை பயன்படுத்தலாம். விண்ணப்ப படிவங்கள் ஜூலை 18ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 'செயலாளர், தேர்வுக்குழு இயக்குனர் அலுவலகம், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை, அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-16' என்ற முகவரிக்கு ஜூலை 21ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil