புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை மீண்டும் அமைக்க கோரி சென்னையில் வரும் 28ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறங்தாங்கி வர்த்தக சபை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அறங்தாங்கி வர்த்தக சபையின் தலைவர் கைலாசநாதன் இன்று கூறுகையில், வர்த்தக சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது.
புதுக்கோட்டை நாடாளுமன்ற மீட்பு குழுவின் போராட்டத்தின் 5வது கட்டத்தின் ஒரு பகுதியாக இது நடக்கிறது என்றார்.