பலத்த மழை காரணமாக சென்னை வழியாக வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக வடமாநிலங்களான ஒரிசா, கொல்கத்தா உள்பட பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மழையால் ரயில்வே தண்டவாளங்கள் கடுமையாக தேசம் அடைந்துள்ளன. இதனால் ரயில் போக்குவரத்து கடந்த 10 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சென்னை வழியாக வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் 14 ரயில்கள் மேலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தூரில் இருந்து சென்னை வழியாக இரவு 11.55 மணிக்கு, திருவனந்தபுரம் இயக்கப்படும் திருவனந்தபுரம் சென்டிரல் விரைவு ரயில் (வ.எண் 6325), திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வழியாக காலை 9.55 மணிக்கு, சாலிமருக்கு இயக்கப்படும் விரைவு ரயில் ( 6323). ரயில் 27ஆம் தேதியும், பெங்களூரில் இருந்து கவுகாத்திக்கு, சென்னை வழியாக காலை 6.30 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் (2509) 26ஆம் தேதியில் இருந்து 28ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜஸ்வந்த்பூரில் இருந்து சென்னை வழியாக காலை 9.55 மணிக்கு, முசாபர்பூருக்கு இயக்கப்படும் ரயில் (5227). கன்னியாகுமரியில் இருந்து எழும்பூர் வழியாக காலை 7.50 மணிக்கு, அவுராவுக்கு (கொல்கத்தா) இயக்கப்படும் அவுரா விரைவு ரயில் (2666) 28ஆம் தேதியும், கவுகாத்தியில் இருந்து சென்டிரல் வழியாக காலை 5 மணிக்கு, ஜஸ்வந்த்பூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (0202) 29ஆம் தேதியும் ரத்து செய்யப்படுகிறது.
கவுகாத்தியில் இருந்து சென்டிரல் வழியாக காலை 4.50 மணிக்கு, எர்ணாகுளத்திற்கு இயக்கப்படும் எர்ணாகுளம் விரைவு ரயில் (2508) 29ஆம் தேதியும், அவுராவில் இருந்து காட்பாடி வழியாக இரவு 11.20 மணிக்கு, மைசூருக்கு இயக்கப்படும் விரைவு ரயில் (0803) 28ஆம் தேதியும். மைசூரில் இருந்து காட்பாடி வழியாக காலை 7.40 மணிக்கு, அவுராவுக்கு இயக்கப்படும் அவுரா விரைவு ரயில் (0804) இன்று(24ஆம் தேதி) முதல் 30ஆம் தேதி வரையும்.
எர்ணாகுளத்தில் இருந்து சென்டிரல் வழியாக காலை 6.30 மணிக்கு, பாட்னாவுக்கு இயக்கப்படும் பாட்னா விரைவு ரயில் (6309) இன்றும், நாளையும், பாட்னாவில் இருந்து சென்டிரல் வழியாக அதிகாலை 4.15 மணிக்கு, எர்ணாகுளத்திற்கு இயக்கப்படும் எர்ணாகுளம் விரைவு ரயில் (6310) ரயில்கள் உள்பட வடமாநிலங்களுக்கு செல்லும் 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.