தமிழக நதிகள் இணைப்பு திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி இன்று மாலை திருச்சியில் தொடங்கி வைக்கிறார். அவர் அடுத்த மாதம் 11ஆம் தேதி டெல்லி செல்கிறார்.
இது தொடர்பாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தஞ்சையில் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறும் தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தின் 200-வது ஆண்டு விழாவில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொள்கிறார். மாலை 5 மணிக்கு திருச்சியில், தமிழகத்திற்குள் நதிகளை இணைக்கும் திட்டத்தின் முதல்கட்டத் தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்.
26ஆம் தேதி காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நோக்கியா சீமென்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்கிறார். 11.30 மணிக்கு 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் வழங்குகிறார்.
27ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சென்னை கலைஞர் அரங்கம், தொ.மு.ச. உறுப்பினர் ராமமூர்த்தி இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்கிறார். மாலை 5 மணிக்கு தமிழ் அறிஞர்களின் நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல்களுக்கான பரிவுத் தொகை வழங்குதல்.
28ஆம் தேதி காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகம், பெல்ஜியம் ஹான்சன் ட்ரைவ்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுகிறார்.
30ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை காமராஜர் சாலை செம்மொழி மைய அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்கிறார். 11.30 மணிக்கு தலைமைச் செயலகம் - ஏ.டி.சி. டயர்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்கிறார். மாலை 4.30 மணிக்கு செம்மொழி மைய அலுவலகம் - விருதுகள் குழுவினர் விருதுகளை இறுதி செய்து அறிவிக்கிறார்.
ஜூலை 2ஆம் தேதி காலை 11 மணிக்கு நாகார்ஜுனா நிறுவனம் அடிக்கல் நாட்டுகிறார். 3ஆம் தேதி மாலை 5 மணிக்கு சாந்தோம் ``புனித தோமையார்'' திரைப்படத் துவக்க விழா பங்கேற்கிறார்.
4ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சென்னையில் நடைபெறும் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்கிறார்.
7ஆம் தேதி காலை 11 மணிக்கு தலைமைச் செயலகம் டாம்ளர் ஏ.ஜி. மற்றும் ஹீரோ குரூப் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுகிறார்.
11 ஆம் தேதி மாலை டெல்லியில் நடைபெறும் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறார்.
14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சென்னையில் நடைபெறும் மா.செல்வராஜ் இல்லத் திருமண விழாவில் பங்கேற்கிறார்.