Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செய்தி ஆர்வமே இலவச தொலைக்காட்சிக்குக் காரணம்: கருணாநிதி!

Advertiesment
செய்தி ஆர்வமே இலவச தொலைக்காட்சிக்குக் காரணம்: கருணாநிதி!
, திங்கள், 23 ஜூன் 2008 (19:39 IST)
மக்களுக்கு செய்திகளைத் தெரிந்துகொள்வதில் இருந்த ஆர்வமே அவர்களுக்கு இலவசத் தொலைக்காட்சி வழங்கும் திட்டத்திற்கு வித்திட்டது என்று தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னையில் இன்று மாலை ராஜ் தொலைக்காட்சியின் 24 மணி நேர செய்தி தொலைக்காட்சி வரிசையை துவக்கி வைத்துப் பேசிய முதலமைச்சர், செய்தித்தாள்கள், வானொலி ஆகியவற்றின் வாயிலாக செய்திகளை அறிந்துவந்த மக்கள், காலையில் எழுந்ததும் உலக நிலவரம் அறிய தொலைக்காட்சியையே நாடுகின்றனர்.

மக்களின் இந்த ஆர்வத்தையும் செய்திகளின் முக்கியத்துவத்தையும் உணர்ந்ததால்தான் பொருளாதாரத்தில் நலிந்த ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக தொலைக்காட்சி வழங்கும் திட்டத்தை தி.மு.க. அறிவித்தது என்று கூறினார்.

மற்ற தொலைக்காட்சிகள் தி.மு.க. செய்திகளை ஒளிபரப்ப மறுத்தபோது ராஜ் தொலைக்காட்சி துணிச்சலுடன் ஒளிபரப்பியது என்றும், அதற்குத் தான் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கருணாநிதி கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil