சாதாரண பெட்ரோல், டீசல் விற்காத பெட்ரோல் நிலையங்கள் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுகுமார் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 5ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது. இந்த விலை உயர்வு காரணமாக அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக லாரி உரிமையாளர்கள் பொருளாதார நஷ்டத்தில் தொழில் செய்ய வேண்டிய சூழ்நிலையில உள்ளனர்.
டீசல், பெட்ரோல் விலை உயர்த்திய தேதியில் இருந்து அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் சாதாரண டீசல், பெட்ரோல் விற்பனை செய்யாமல், விலை உயர்ந்த பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது. சாதாரண பெட்ரோல், டீசல் கேட்டால், இருப்பு இல்லை என்கிறார்கள்.
உடனடியாக அனைத்து விற்பனை நிலையங்களிலும் சாதாரண பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க வேண்டும். இவற்றை 26ஆம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும்.
இல்லாவிட்டால் 27ஆம் தேதி காலை தமிழ்நாட்டில் சாதாரண, பெட்ரோல், டீசல் விற்பனை செய்யாத பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பு லாரி உரிமையாளற்கள் சங்கம் சார்பில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் முற்றுகைப் போராட்டம் நடத்துவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.